டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! 

Photo of author

By Rupa

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!!

அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்முழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றனர்.இதையடுத்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளதால் அதில் சென்ற பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த 2200 பயணிகளில் 1600 பயணிகள் கடலில் மூழ்கி பலியாகினர். இதையடுத்து டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது உலகத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றாக மாறியது.

வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து 400 மைல் தொலைவில் தென்கிழக்கே நீயுபவுன்ட்லேண்ட் தீவு உள்ளது.பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் 1985ம் ஆண்டு இந்த நீயுபவன்ட்லேண்ட் தீவின் கடல் பகுதியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்த கப்பலின் முன்பக்கம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றுள்ளனர்.சுற்றுலா பயணிகளுடன் சென்ற இந்த நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அநத பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீர்மூகப்பலில் எத்தனை சுற்றுலா பயணிகள் சென்றார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.  ஆனால் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.