கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!!

0
205
#image_title

கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!!

கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு – தீயணைப்பு மீட்பு படையினர் கயிறு மூலம் பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில், கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் கயிறு மூலம் பசு மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

 

 

 

Previous articleடிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!
Next articleஅதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!