ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

0
110

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த நிலையில் திடீரென்று ‘பத்து தல’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நர்தனுக்கு பதில் காந்தி கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்பு இல்லாத மற்ற காட்சிகளை படக்குழுவினர் தென் தமிழகத்தில் படமாக்கி முடித்துள்ளனர். சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.

 இதையடுத்து கடந்த சில மாதங்களாக இதன் ஷூட்டிங் நடந்துவந்த நிலையில் தற்போது படத்தின் “டாக்கி” பகுதிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குப் பிறகு வேறு புதிய படங்கள் எதிலும் நடிக்க இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.