தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு

0
191

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவரும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கடந்த வாரம் இந்த படத்தில் இடம் பெற்ற ‘சில்புரோ’ என்ற தனுஷ் பாடிய பாடல் சிங்கிள் பாடலாக வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை நாளை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11.30க்கு வெளியாகும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக்-மெர்வின் இசையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை
Next articleமாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்!சொன்னது யார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here