ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

0
214
#image_title

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகரான பவன் கல்யாண் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பவன் கல்யாண் அவர்களின் இந்த முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பவன் கல்யாண் அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். இதற்கு மத்தியில் கடந்த மாதம் ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு அவர்களை பவன் கல்யாண் அவர்கள் சந்தித்து பேசினார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பவன் கல்யாண் அவர்கள் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் பாஜக கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பவன் கல்யாண் அவர்கள் அறிவித்துள்ளார்.

பாஜக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் “சந்திரபாபு நாயுடு அவர்களின் தெலுங்கு தேசம் கட்சி மிக வலிமை கொண்ட கட்சியாகும். ஆந்திர மாநிலத்தில் சிறந்த ஆட்சி அமைவதற்கும் சிறந்த வளர்ச்சி பெறுவதற்கும் தெலுங்கு தேசம் கட்சி தேவைப்படுகின்றது.

தெலுங்கு தேசம் கட்சி இக்கட்டான சூழ்நிலையில் இன்றைய அளவில் இருக்கின்றது. நாம் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஜனசேனா கட்சி இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசம் கட்சிக்கு தற்பொழுது தேவைப்படுகின்றது. ஜனசேனா கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்று சேர்ந்தால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மூழ்கி விடும்” என்று கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக கட்சி ஏற்கனவே வெளியேறி உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஓரளவிற்கு மக்கள் வரவேற்பு பெற்றுள்ள ஜனசேனா கட்சியும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Previous articleடிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!
Next articleபாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!