80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார்.
ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஹுசைனி தனது உடலை தானமும் செய்திருந்தார். அதேநேரம், எனது இதயத்தை எனது கராத்தே பயிற்சி மாணவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஹுசைனை மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயையும், நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்திக்க ஆசைப்படுவதாக ஹுசனி கூறியிருந்தார். ஏனெனில், பத்ரி படம் உருவானபோது அவர்கள் இரண்டு பேருக்கும் சில பயிற்சிகளை ஹுசைனி கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே ஹுசைனியை சென்று பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் மரணமடைந்திருக்கிறார் ஹுசைனி.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பவன் கல்யாண் ‘ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் போனது 4 நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியும். சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என சொல்லியிருந்தேன். வரும் 29ம் தேதி சென்னையில் ஹுசைனியை பாரக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், அவரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் வேதனையாக இருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.