நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த கூட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார்.
அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னமும் அவர் செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை. செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் சொன்னால் அவருக்கு ஒன்னும் தெரியாது என்பது தெரிந்துவிடும் என்றும் திமுகவினர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், இது எதற்கும் விஜய் விளக்கம் அளிப்பது இல்லை. இப்போதைக்கு விஜயின் அரசியல் என்பது அறிக்கை வெளியிடுவது மட்டுமே என்கிற நிலையில் இருக்கிறது. விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறது.
அதாவது, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்யும் முடிவில் இருக்கிறார். மேலும் பூத் கமிட்டி மாநாடு, மண்டல மாநாடு என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இது போக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், நடிகர் மற்றும் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயின் அரசியல் வருகை பற்றி பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கிறார். ஒரு நடிகராக இருந்துவிட்டு உடனே முதல்வராகி விட முடியாது. இதில் எந்த குறுக்கு வழியும் இல்லை. என்.டி.ராமாராவுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்காது. எல்லோரும் எதிரியாக மாறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். எனவே, முதலில் நிலைத்து நிற்க வேண்டும். விஜய்க்கு அனுபம் உள்ளது. நான் சொல்ல தேவையில்லை’ என பேசியிருக்கிறார்.