பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்!
2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் வங்கி முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேவைகளை செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தனர். அந்தவகையில் ஆதாரில் புதிய தொலைபேசி எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் மூலம் பணம் பரிவர்த்தனை போன்றவை செய்து கொள்ளலாம். தற்பொழுது இதே சேவையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழையும் சமர்ப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் நபர்கள் கட்டாயம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த வகையில் சில வயது முதிந்தவர்களால், நேரில் சென்று சமர்ப்பிக்க செல்லும் போது பல இன்னல்கள் ஏற்படுகிறது. இதை அனைத்தும் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஜீவன் பிரமான் திட்டம் கொண்டு வந்தது. அதாவது அஞ்சல் துறையில் முன்பே செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வால் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஓய்வூதியதாரர்கள் கைரேகையை பதிவிட்டு டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சில நொடிகளிலேயே சமர்ப்பித்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ 70 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர்கள் அவர் பகுதியில் உள்ள தபால் காரரிடம் தங்களின் விவரங்கள் கொண்ட ஆதார் எண், செல்போன் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரம் கொடுத்து கைரேகை பதிவிட்டால் போதும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்தல் குறுஞ்செய்தி ஓரிரு நிமிடங்களிலேயே வந்துவிடும். இதற்காக வங்கிக்கு சென்று சிரமப்பட தேவை இல்லை.