பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி!

0
139
Pay hike for them as Pongal gift? The promise given by the Chief Minister!
Pay hike for them as Pongal gift? The promise given by the Chief Minister!

பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது.

அதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணமும், பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் இருந்து கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.அதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெற்றது.டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்கர் எஸ்.பெருமாள் கூறுகையில் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவர்கள் இணைந்தது போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் போது முதல்வர் நேரில் வந்து அடுத்து அமையுள்ள திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.அதனையடுத்து எதிர்பார்த்தது போல திமுக ஆட்சி அமைந்தது.ஆனால் தற்போது வரையிலும் ஊதிய கோரிக்கை நிறைவேற்றவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டரை ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காலங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி பிறகும் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில் திங்கள்கிழமை அதாவது இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பொங்கல் பரிசாக அரசு மருத்துவர்களுக்கு மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 இன் படி ஊதிய உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Previous articleதிரையுலகில் சிவாஜி கமல் மட்டுமே நடிகர்கள்! சிவகுமாரின் பகீர் பேட்டி! 
Next articleஅரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!