உடனே இந்த கட்டணத்தை செலுத்துங்கள் இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்!! மின்சார வாரியம் கொடுத்த அலார்ட்!!

Photo of author

By Rupa

 

TNEB : மின் கட்டணம் குறித்து மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் அதனை முற்றிலும் தவிர்க்குமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு முறை மின்கட்டணத்தை உயர்த்திவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் பகிர்மான கழகத்தில் ஏற்பட்ட இழப்பீடு என ஒப்பேற்றியும் வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் வைத்து தற்பொழுது புதிய மோசடி கும்பல் கிளம்பியுள்ளதாக மின்சார வாரியம் அலார்ட் செய்துள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு நுகர்வோருக்கும் கடந்த முறை மின் கட்டணம் சரி செய்யப்பட்டுள்ளதால் தற்பொழுது குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் இல்லையென்றால் உங்கள் மின் இணைப்பானது உடனடியாக துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதேபோல மின் கட்டணம் உயர்த்தியதை கணக்கிட்டு ஜூலை மாதத்திற்கான கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்றும் மின்சார வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் எண்ணிற்கு இவ்வாறான குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக சைபர் கிரைமிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதேபோல மின்சார கட்டண உயர்வால் விடுபட்ட அந்த சிறு தொகை செலுத்தும் படி குறுஞ்செய்தியானது வீட்டின் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் இதனை அதிகாரப்பூர்வ இணைதளத்தில் https://tnebltd.gov.in சென்று சரிபார்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.