இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்
இந்திய அணியில் டைட்டில் ஸ்பான்சராக Paytm நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான நீண்டகால டைட்டில் ஸ்பான்சர் – Paytm ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது. அந்த நிறுவனத்துக்குப் பதிலாக மாஸ்டர்கார்டு உள்நுழைகிறது. Paytm 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை உரிமைகளை வைத்திருந்தது. முன்னதாக BCCI ஜெர்சி உரிமையை Oppo நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தகக்து.
“மாஸ்டர்கார்டு Paytm-ன் அதே விதிமுறைகளில் வரும்” என்று பிசிசிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 2019 அக்டோபரில் தொடங்கும் நான்கு ஆண்டு சுழற்சிக்காக Paytm ₹326.8 கோடியை செலவிட்டுள்ளது, இது ஒரு போட்டிக்கு ₹3.8 கோடியாக அமைந்தது.
பிசிசிஐ ஜெர்சி ஸ்பான்சர்களான பைஜுவின் -அவர்களின் ஒப்பந்தம் சமீபத்தில் 2023 ODI WC வரை நீட்டிக்கப்பட்டது – 86.21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த தொகை ஒப்பந்தம் கையெழுத்தானதும் அளிக்கப்படும் என பைஜூஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.