கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் – தீபாவளி நாளன்று நடந்த இரட்டை கொலை!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணன், அண்ணியை  தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (37 வயது). இவரது  மனைவி ருக்குமணி (30 வயது).  இவரது தம்பி முருகன்  (28 வயது).  இவ்விருவருக்கும் நீண்ட நாட்களாக நிலப்பிரச்சனை இருந்து உள்ளது.

சம்பவத்தன்று இப் பிரச்சனை முற்றியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவை  கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறான். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தனது அண்ணன் மாரிமுத்துவின் வீட்டுக்கு திடீரென வந்து இருக்கிறான் முருகன் .மேலும் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் சண்டை போட்டு இருக்கிறான்.

இந்த நிலையில்  திடீரென தனது சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக மாரிமுத்து மற்றும் ருக்குமணியை வெட்டியுள்ளான். இதனால் இரத்த வெள்ளத்தில் இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்கள். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தீபாவளி நாளில் நடந்த இந்த இரட்டை கொலை அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த  அண்ணன், அண்ணியை  வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய முருகனை சாம்பல்பட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.