ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமைதி பேரணி!! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமைதி பேரணி!! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Jeevitha

Peace Rally on 7th August!! Important announcement made by the DMK leadership!!

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமைதி பேரணி!! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டப்பட்டது. மேலும் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகம்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் நினைவு நாள் வர உள்ளது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளர்க்ள.

மேலும் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. முதல்வர் அமைதி பேரணி குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து பெரிநாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை காலை 8 மணிக்கு அமைதி பேரணி நடைபெற உள்ளது.

மேலும் இந்த பேரணியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த பேரணி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.