உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் மின் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 14,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் விவசாயிகளுக்கு 2500 மெகாவாட் தேவைப்படுகின்றது. இந்த மாதம் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகளில் குளிரூட்டும் பெட்டி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட கோடை வெப்பத்தை தணிக்கும் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் மூலமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மின்சார தேவை 16௦௦௦ மேல் அதிகரித்துள்ளது.
விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்த பிரிவுக்கான மின் தேவை மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்துள்ளது. மேலும் இது போன்ற காரணங்களால் மார்ச் 4ஆம் தேதி காலை 10:30 மணிக்கு எடுக்கப்பட்ட அளவின்படி மின் தேவை முதல் முறையாக 17584 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் எடுக்கப்பட்ட கணக்குப்படி 17,563 மெகாவாட்டாக இருந்தது.
விவசாயத்துக்கான 18 மணி நேரம் மின் வினியோகம் மார்ச் ஐந்தாம் தேதி காலை 8.30 மணி அளவில் இருந்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்குவதால் வீடுகளின் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மின் தேவை எப்போதும் இல்லாத அளவில் 17,676 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் ஆயிரம் மெகாவாட் உயர்ந்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து 5800 மெகா வாட் உள்பட சூரியகாந்தி மின் நிலையங்கள் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்டவை மூலம் தேவையான மின்வாரியம் பூர்த்தி செய்துள்ளதாகவும், தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.