மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! 

Photo of author

By Jeevitha

மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!!

சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது.   அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது.

இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதிருந்தார். இது போன்ற விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் துவரப்பருப்பு தமிழகத்திற்கு தர வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களை விடுவிடுப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும்.

அதனையடுத்து உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டும். மேலும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் சில உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க அனைத்து மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதனையடுத்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பருப்பு வகைகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு பாரத் தால் திட்டதின் கீழ் ஒரு கிலோ பருப்பை 60 ரூபாய் விற்பனை செய்ய புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஒரு கிலோ 55 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களில் முக்கிய ஒன்று  கடலை பருப்பாக  உள்ளது. இந்த திட்டத்தை நேற்று அறிமுகபடுத்தியது. இதனால் மக்களின் சிரமம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.