பெகாஸஸ் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு!

0
147

இந்தியாவில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 200 நபர்களின் கைபேசிகள் ஒரு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றனர் உளவு மென்பொருள் மூலமாக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கைப்பேசிகளை உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை உண்டானது.

இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள் இதனால் அவையை சரிவர நடத்த இயலவில்லை இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க காத்திருக்கிறோம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவள் கண்ணீர் மல்க தெரிவித்தார் இதற்கிடையில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து சமயத்தில் இந்த பெகாஸஸ் செயலி மூலமாக உளவு பார்க்கப்பட்ட அவர்கள் யாரும் ஏன் இதுவரையில் எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தொழில்நுட்பம் மூலமாக தனிநபர் அந்தரங்கங்களை அரசு ஒட்டுக்கேட்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த செயலின் தொழில்நுட்பம் இடையூறு விளைவிக்க கூடியது, சட்டவிரோதமானது 2019 ஆம் வருடம் முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அது தொடர்பான விபரம் தற்சமயம் தான் வெளியாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.இதனால்தான் இத்தனை தினங்கள் யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்து இருக்கிறார்கள் எனவும், வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்றையதினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகைதந்த சமயத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பிரமாண பத்திரத்தில் மனுதாரர்கள் அதைத் இருக்கின்ற ரிட் மனுவில் கூறப்பட்டு இருக்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்து இருக்கிறது மத்திய அரசு.அதோடு இந்த உளவு மென்பொருள் விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சகம் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதே ஒட்டுக்கேட்பு பிரச்சனையை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்தது என்பது பலரும் அறிந்ததுதான் அப்போது பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் அவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று பாஜக சார்பாக தெரிவிக்கப்பட்டது அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தரப்பு பிரதமரிடம் தொலைபேசியை இல்லை என்று தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Previous articleஷூட்டிங்கில் செட்டை பார்த்து பயந்த முன்னாள் நடிகை! இங்கேயா என அதிர்ச்சி?
Next articleபிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம்! பிரபலத்தின் பல நாள் ஆசை நிறைவேறியது!