கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0
137

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ‌கொரோனா‌ பாதிப்பால் இதுவரை 4.74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படங்கள் 24 மணி நேரத்தில் மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது. இன்றைய தேதியில் 1,157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொன்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களுது மாவட்டங்களுக்கு பல்வேறு தடுப்பு விதிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200,
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500,
தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ. 500,
தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 500
என சில விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Previous articleஉலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?
Next articleஇந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!