விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

0
157

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி  இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இறுதி நேரத்தில் விமானங்களை மாற்றுதல், கூடுதலாக இடங்கள் வேண்டுமென முன்பதிவு இருக்கையில் சேவையில் குறைபாடு உள்ளது என பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே இவ்வாறான காரணங்களை விமான நிறுவனங்கள் கூறி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக டி ஜி சி ஏ தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு தெரியாமல் பயண வகுப்பு மாற்றம் செய்யப்பட்டால் வரிகள் உட்பட பயண கட்டணத்தை முழுமையாக திருப்பி அனுப்புவதுடன் அடுத்த வகுப்பில் வரும் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான்.

அதனைத் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி மறுப்பு, விமான ரத்து, விமானம் தாமதம் போன்றவற்றைக்கு  இழப்பீடு வழங்கும் வகையில் முந்தைய விதிமுறைகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்ற பயணிக்கு பயணம் மறுக்கப்படும் நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த பயணத்தை அவருக்கு அளித்துவிட்டால் இழப்பீடு வழங்க வேண்டாம். 24 மணி நேரத்திற்குள் அடுத்த பயணத்தை அளிக்கவில்லை என்றால் 200 சதவீத பயண கட்டணம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

 

ஒரு நாளுக்கு அதிகமாக நேரம் தாண்டினால் 400 சதவீதம் இழப்பீடாக வழங்க வேண்டும் மாற்று பயணத்தை பயணிகள் ஏற்கவில்லை என்றால் பயண கட்டணத்தை முழுமையாக திருப்பி அழைத்து 400 சதவீதம் இழப்பீடு அல்லது அதிகபட்சம் ரூ.20,000 வரை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தற்போது விதிமுறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதலைவலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா ? மாத்திரை போடாமல் தலைவலியை போக்க பொன்னான வழிகள் !
Next articleபள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!