பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை!
இந்தியாவின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறை கூறுகையில் நாடு மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் இதற்காக ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இந்த நடவடிக்கை அனைத்தும் வீணாகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சை துப்புவது, சிறுநீர் கழிப்பது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவற்றை அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் அதனை மீறி மக்கள் செயல்பட்டு தான் வருகின்றனர். பொது இடத்தில் எச்சை துப்புவது மற்றும் குப்பை கொட்டுவது போன்ற செயல்களின் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேசம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 6 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ளவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 150 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடையை மீறி பொது இடங்களில் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குப்பை கொட்டுவது எச்சை துப்புவது ,சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.