ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாட்றினார். அந்த உரையாடலில்  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி வழங்கி வருகிறோம் என்று கூறினார்.  நாட்டுக்காக போராடி தியாகிகளை போற்றும் வகையில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்கள் இறக்க நேரிட்டால் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்திய விடுதலையின் பவள விழா நிரப்பி மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளை தற்போது வெளியிடப்படுவதில் பெருமைப்படுவதாகவும் கூறினார். மாநில அரசின் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதங்கள் ஓய்வுகள் தொகை ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி   முதல் பதினெட்டாயிரத்தில் இருந்து    இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் கூறினார்.

மேலும் ஒன்பதாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரையிலும்  உயர்த்தி  உள்ளதாகவும் கூறினார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்களுக்கான சிவகங்கை மருது பாண்டிய சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான  ,சிவகங்கை முத்துராமலிங்கர் விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்களுக்கான, வ உ சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு விகிதம் 9000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார்.