ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்!

Photo of author

By Parthipan K

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்!

திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நடத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் தின கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது.அதனால் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது,அந்த விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார்,

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாவட்டங்களில் நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்,வேலை வாய்ப்புடன் மென்பொருள் திறன் பயிற்சி  வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது ஓய்வூதியம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகின்றனர்.அவை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 1500 ஆக உயர்த்தப்படும் இந்த கூடுதல் ஓய்வூதியம் குறித்து  நன்றி கூறும் விதமாக அனைத்து மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர்கள் அனைவரும் அவரவர்களின் நன்றியை தெரிவித்தனர்.