Breaking News

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Pension of transport employees! Minister who released important information!

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

அமைச்சர் சுவாசங்கள் ஊர் நிகச்சியில் கலந்துக்கொண்டனர்.பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுவதாகவும்,போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. மேலும் நிதி நிலைக்கு ஏற்ப மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக ஓய்வூதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இன்று துவக்கி வைக்கபட்ட மிஷன் சென்னை வாகனம் மூலம் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் , தனியார் ஓட்டுநர்கள் என 30 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை செய்து, அவர்களுக்கு சாலை பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கவுள்ளதாக கூறினார்.

மேலும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி, விபத்துக்களை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளதாக கூறினார்.

Leave a Comment