இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
148

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டபேரவை தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி.

இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி பதவி ஏற்றார். ஏற்கனவே டெல்லியிலும் தனது ஆட்சியை நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி தற்போது இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் மாநிலத்திலும் தனது ஆட்சியை அமைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அந்த மாநில முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வருகிறது. அதேவேளை ஒன்றிற்கும் மேற்பட்ட முறை அப்பதவியில் இருந்தவர்களுக்கு 3 லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது கருவூலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எத்தனை முறை வெற்றி பெற்றிருந்தாலும் இனி அவர்களுக்கு ஒரு பதவி காலத்திற்கு உண்டான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். அதில் சேமிக்கப்படும் பணம் பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous articleகூகுள் நிறுவனம் மீது புகார் வழங்கிய இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம்!
Next articleஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!