பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி!
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குரலை கேட்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் மன் கி பாத் என்ற வினாக்கள் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களிடம் உரையாற்றி வருகின்றார். இதே போல கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 108வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 108வது மனதின் குரல் “மன் கி பாத்” நிகழ்ச்சியை திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் அவருடைய வீட்டில் முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தூர்தர்ஷன் சேனலில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் பான்ற இதிகாச தொடர்கள் ஒளிபரப்பப்படும். இந்த இதிகாச தொடர்களை பார்க்க எங்களுடைய தாய்மார்களும், சகோதரிகளும் டிவி திரையை தேடி செல்வார்கள்.
ஆனால் தற்பொழுது ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை வந்தாலே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்க தாய்மார்களும் சகோதரிகளும் செல்வதை நாம் பார்க்கின்றோம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன் கி பாத் நிகழ்ச்சியானது இதிகாச தொடர்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய நிகழ்ச்சிகளை விட பிரபலமாகி விட்டது” என்று கூறியுள்ளார்.