MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!

0
205
#image_title

எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய குணச்சித்திர நடிகர் மற்றும் பல நடிகர்களின் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்தாலும் சரி பெரிய ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளி காட்டுவதில் இவரும் ஒருவர்.

எங்கள் அண்ணா படத்தின் மூலம் ஒரு சிறந்த காமெடியனாக மக்களுக்கு தெரிய வந்தவர் இவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் பெரிதும் அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.

 

இப்பொழுது தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் கேப்டன் விஜயகாந்த் இறந்ததுதான். கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் விஜயகாந்த் இறந்துள்ளார்.

இதற்கு முன்பும் சரி அவரது உடல்நிலை சற்று மோசமாகவே இருந்தது.

 

அப்படி தமிழ்நாட்டில் ஒரு ஒரு சோக சம்பவம் என்றால் விஜயகாந்த் இழப்புதான். இப்பொழுது பல நடிகர்களும் , மக்களும் சரி அவரது சம்பந்தமான வீடியோக்களையும், அவர் சம்பந்தமான கதைகளையும் அவர் சம்பந்தமான சுவாரசிய சம்பவங்களையும் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

 

அவர் எவ்வாறு இருந்தார்? எப்படி மக்களுக்கு உதவினார்? என்னென்ன உதவினார் என்பதை பற்றி அனைத்து தகவல்களையும் சொல்லி வருகின்றனர் அதுவே நமக்கு ஒரு வியப்பூட்டும் வகையிலும் இவ்வளவு நன்மைகளை செய்துள்ளார். ஏன் மக்களை அவர் தேர்ந்தெடுக்கவில்லை? என்ற எண்ணமும் நமக்கு மேலோங்குகிறது.

 

இருப்பினும் இந்த மாதிரி கலியுக கர்ணனை இனி யாராலும் பார்க்க முடியாது என்றும் சொல்லும் அளவிற்கு அவர் பெயர் நிலைத்து உள்ளது.

 

இப்படித்தான் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் விஜயகாந்த் உடன் பணியாற்றும் பொழுது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

அனைவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் அவர்கள் உணவு வழங்குவார். அவருடன் சேர்ந்து தான் உணவும் சாப்பிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இப்படி ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது எம் எஸ் பாஸ்கர் அவர்களும் இருந்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் உணவருந்தும் பொழுது அனைத்து விதமான அசைவ உணவுகளும் இருந்திருக்கிறது. ஒரு கரண்டி முழுக்க மட்டனை அப்படியே எடுத்து வைப்பாராம் விஜயகாந்த்.

 

அண்ணா! என்ன அண்ணா? இது ? என்று எம் எஸ் பாஸ்கர் கேட்க” பாரு இவன் கோபித்துக் கொள்கிறான்”. இன்னொரு கரண்டி வை !என்று சொல்லுவாராம்.

 

சாப்பிட்டு முடித்துவிட்டு நேராக சூட்டிங் செய்ய வரும் பொழுது ” இப்படி எல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் என்னால் இரண்டு மணிக்கு ஷூட்டிங் வர முடியாது “?என்று அவர் சொல்லியிருக்கிறார்.

 

உனக்கு என்ன இப்பொழுது தூங்க வேண்டுமா? என்று சொல்லி நான்கு மணிக்கு காட்சிகள் வைத்துக் கொள்ளலாமா? போதுமா! என்று கேட்டுவிட்டு, பேரரசுவை கூப்பிட்டு “இவனுக்கு நாலு மணிக்கு ஷாட் வைத்து விடுங்கள் ” என்று சொல்லிவிடுவாராம் . பேரரசு சரி என சொல்லிவிடுவார். இவர் போய் தூங்கி விட்டு எழுந்து வருவாராம்.

 

இப்படி அவர் கூறும் பொழுது விஜயகாந்த் “எனக்கு அண்ணன் அல்ல! அம்மா என்று நான் பல மேடைகளில் கூறியிருக்கிறேன்” என்று அவர்

தெரிவித்திருந்தார்.

author avatar
Kowsalya