தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

Photo of author

By Parthipan K

தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

Parthipan K

People are returning to work after the Diwali vacation! The crowd at the train and bus station!

தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

இந்த மாதம் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி என்பதால் முன்னதாகவே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினர் அதனால் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ ,மாணவிகள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

மேலும் இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துக்களுடன் கூடுதலாக 4ஆயிரத்து 218சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் சென்றதால் சென்னையின் முக்கிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் நேற்றுடன் தீபாவளி விடுமுறை முடிந்தது.

அதனையடுத்து வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் பணிக்கு செல்ல மீண்டும் அந்ததந்த ஊர்களுக்கு திரும்பினர்.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியதால் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ரயில் நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் தாம்பரம் போன்ற முக்கிய இடங்களில் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.