மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்!
வளர்ந்து வரும் காலகட்டத்தில் டெக்னாலஜியும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி பல நன்மையான காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதே வகையில் தீமைக்கும் இது பெரும் உதவியாக உள்ளது. மக்களின் அனைவர் கையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன் என ஒன்று உள்ளது. பலருக்கு இந்த ஸ்மார்ட்போன் தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வைக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். சமூக வலைத்தளத்தில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது முதல் தங்கள் வங்கி கணக்குகள் என அனைத்தையும் ஸ்மார்ட் போனை பயன்படுத்திய செய்கின்றனர்.
இதனை பலர் தன்வயப்படுத்திக் கொண்ட மக்களிடமிருந்து கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில் முதலில் வங்கியிலிருந்து அழைப்பு விடுவது போல கூப்பிட்டு அவர்களின் வங்கி கணக்கு எண் முதற்கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொண்டு, அவர்களது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் பணத்தை எடுத்து வருவது வழக்கமாக இருந்தது. ஆரம்பகட்ட காலத்தில் காவல்துறைக்கு இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. பின்பு போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இருப்பினும் இன்னும் ஒரு சில இடங்களில் இவ்வாறான சம்பவம் நடந்து தான் வருகிறது. தற்பொழுது மக்களுக்கு அழைப்பு விடுவதை நிறுத்தி விட்டு அதற்கு மாற்றாக எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றனர். அந்த குறுஞ்செய்தியில் உங்களுக்கும் லோன் தருகிறோம் என்று கூறி மக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு சேலம் புது ரோடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் அங்கமுத்து. அங்கமுத்து ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கமுத்து உபயோகிக்கும் செல்போன் எண்ணிற்கு கடன் வழங்குவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அங்கமுத்து குறுஞ்செய்தி வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.
பின்பு குறுஞ்செய்தி அனுப்பியவர் அங்க முத்துவிடம் லோன் தருவதாக நல்ல முறையில் பேசியுள்ளார். அங்கமுத்து கும் அவரை நம்பி தனது வங்கிக் கணக்கு எண் என அனைத்தையும் கொடுத்துள்ளார். பின்பு அங்கமுத்து விற்க தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் வரை மோசடி கும்பல் பறித்துக் கொண்டது. பின்பு அங்கமுத்து அந்த மோசடி கும்பலை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த மோசடி கும்பல் எந்தவித பதிலும் அளிக்காததால் தற்பொழுது காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல சேலம் பெருமாள் கோவில் தோட்டம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவரின் மகன் முத்துக் குமாருக்கும் இதுபோன்றே நடைபெற்றுள்ளது. முத்துக் குமாருக்கும் தனிநபர் கடன் தருவதாகக் கூறி நல்லமுறையில் பேசி அந்த மோசடி கும்பல் ரூ ஒரு லட்சம் வரை பறித்துக்கொண்டது. இதுகுறித்து தற்போது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்பொழுது இதுபோன்ற குறுஞ்செய்தி வருவதை யாரும் நம்பவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.