மக்களே எச்சரிக்கை! அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் வேலை நிறுத்த போராட்டம்!
சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகன விதிகள் அமலுக்கு வந்தது.அந்த விதிகளின்படி சாலைகளில் நாம் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும்.அவ்வாறு வழி விட மறுத்தால் 10,000 ஆயிரம் அபராதமாக வழங்கவேண்டும்.மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
பிரிட்டனில் தற்போது பணவீக்கம் மற்றும் அனைத்து விலைகளும் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஊதிய உயர்வு வேண்டி ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது சுகாதார சேவை என்ஹெச்எஸ் துறையில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் அங்கு மருத்துவ சேவைகள் பெருமளவு பாதிப்படைந்தது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து பிரிட்டன் அரசு கூறுகையில் பொதுமக்களின் உயிரை பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்க செயலாகும்.இப்படி நீங்கள் செய்தது வருத்தம் அளிக்கின்றது என கூறினார்.மேலும் இவ்வாறு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தால் ஆம்புலன்ஸ் தேவைப்படும் சூழலை கொண்ட விளையாட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 1 லட்சம் செவிலியர்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.