மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்!
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கடந்த 14ஆம் தேதி அன்றே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை ,ஊதியம் ,ஒப்பந்தம்,வங்கிகளில் கணினி மயமாக்குதல் ,ஒபந்தம் சேவையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது.
ஆனால் சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.அதுமட்டுமின்றி ஒரு சில வங்கிகளில் ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து வேறு ஊரிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.அந்தவகையில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த 3000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஒருசில வங்கிகள் செய்வது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாக உள்ளது.இந்நிலையில் ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்பு தொகை வசூலிக்கும் பணியில் உள்ள 240ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.ஆனால் அவர்களுக்கென எந்த ஒரு இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை.
இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் அதற்கான தீர்வு காண்பதற்கும் தான் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் சங்கம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.அதனையடுத்து கடந்த 16ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சு வார்த்தையில் இதற்கான தீர்வு கிடைக்க வில்லை அதனால் நாளை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.