மக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!
கேரள மாநிலத்தில் சில நாட்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் நோய் தொற்று அதிகரிப்பதால் பறவைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸைத் தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட பறவை மற்றும் கோழியுடனான தொடர்பைத் தடுப்பது சிறந்த வழியாகும்.
கேரளாவை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு கருதி கோழி தீவன வண்டிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.பறவைகள் இடையில் பரவும் பறவை காய்ச்சல் நோய் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில்,பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் மற்றும் கண்களிலிருந்து சுரக்கும் திரவத்திலிருந்து பரவுகிறது.
இதற்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.தற்போது கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் மட்டுமே பறவைகளுக்கிடையே நோய் தாக்குதல் உறுதியாகியுள்ளது.மேலும், எச்5என்1 வைரஸ் கிருமிகள் அதிக வீரியமிக்கவை பறவைகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
இக்காரணத்தினால் உண்ணி கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் வெளியிட்டு உள்ளார். பண்ணைகளில் பார்வையாளர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பண்ணைகளில் ஏற்படும் இறப்புகளை கால்நடை துறைக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பண்ணை நடத்துபவர்கள் வேறு பண்ணைகளுக்கும், பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.