மக்களே எச்சரிக்கை.. மூளையை தின்னும் அமீபா!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!
கேரளாவில் கடந்த சில நாட்களாக மூளை காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் கேரளா மாநிலம் கோழிகோடு மாவட்டத்தை சேர்ந்த இ.பி மிருதுள் என்பவர் இறந்தார்.தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
இந்த அமீபா தொற்றின் பெயர் மேனிங்கோ-என்செபளிஷ்டிஸ் அல்லது பிஎஎம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொற்று ஏற்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் தீவிர காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். மேலும் தொற்று தீவிரம் அடையும் பட்சத்தில் கழுத்து இறுக்கி உணர்ச்சியற்று காணப்படும். மனக்குழப்பம், பிரம்மைகள் மற்றும் வலிப்பு ஏற்படும். இதனால் பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் மூளையை அதிகமாக பாதிக்கும் போதும் கோமாவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் கேரளாவில் பரவி வரும் தொற்றின் கணக்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
தேங்கி நிற்கும் நீர் நிலைகளை சோதனை செய்ய வேண்டும். ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை சோதனை செய்து குலோரிநேசன் செய்ய வேண்டும். மேலும் தனியார் நீச்சல் குளங்கள் மற்றும் அரசு பூங்காகளில் இருக்கும் நீச்சல் குளங்களை சோதனை செய்து குலோரிநேசன் செய்ய வேண்டும். இதன் மூலம் நீச்சல் செய்யும் பொது மாசுபட்ட நீர் மூக்கில் ஏறி பரவாமல் தடுக்கலாம். நோயை பரப்பும் உரிர்க்கொல்லி அமீபா பரவலை தடுக்கலாமென உள்ளாட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.