மக்களே உஷார்!! சத்து மாத்திரை என சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரை! ஒரு பெண் உயிரிழப்பு!

Photo of author

By Kowsalya

ஈரோடு அருகே சத்து மாத்திரை என பூச்சிக்கொல்லி மாத்திரைகளை கொடுத்து மர்மநபர் மாத்திரையை சாப்பிட சொல்லி 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தோற்றால் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். யாரிடம் வந்து நமக்கு ஒட்டிக் கொள்ளுமோ? என பயந்து நடுங்குகிறார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த நிலையில் முற்றிலும் வேறுபட்ட ஒரு சம்பவம் நடந்து உள்ளது.
இதை எதற்காக அந்த மர்ம நபர் செய்தார் என்று தெரியவில்லை.

ஈரோடு அருகே இது சத்து மாத்திரை சாப்பிடுங்க ,நல்லா சத்து வரும், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், என கூறி மர்ம நபர் கொடுத்த மாத்திரை சாப்பிட்டதால் நாலு பேர் உயிருக்குப் போராடி, அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் ஒரு நபர் மிகவும் டிப்டாப்பாக வந்துள்ளார். நான் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து வருகிறேன், என்று கூறி சத்து மாத்திரைகள் என கூறிய அவன் சில மாத்திரைகளை கொடுத்து உள்ளான். அதனை நம்பி 4 பேர் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட ஒரு சில மணி நேரத்தில் நான்கு பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நான்கு பேரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மல்லிகா என்பவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். பின் அவர்களைச் சோதித்துப் பார்த்து விட்டு மருத்துவர்கள் சொன்னது கேட்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த மர்ம நபர் கொடுத்தது சத்து மாத்திரை இல்லை. பூச்சிக்கொல்லி மாத்திரை .celphos tablets என தெரியவந்துள்ளது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படி தவறான மாத்திரைகளை கொடுக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.