மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

0
151
Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!
Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதுநாடான் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் அதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 90 சதவீதம் மக்கள் செலுத்திவிட்டனர்.

இருப்பினும் தோற்று பாதிப்புக்கள் முடிவுற்ற பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் தொற்று பாதிப்பு அதன் அடுத்த கட்டத்திற்கு சென்று அதிகளவு பாதிப்பையே தருகிறது.கொரோனா தொற்றானது ஏ1 வைரஸாக மாற்றமடைந்தது.அதனையடுத்து ஒமைக்ரானாக வலம் வந்தது.தற்போது எக்ஸ்இ வைரஸாக மாற்றமடைந்துள்ளது.தற்போது தொற்று பாதிப்புக்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.மகாராஷ்டிரா,டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.அத்னைகடந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

ஐஐடி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர்களுக்கு அங்கேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.இவர்களுக்கு தற்போது தொற்று உறுதியாகி இருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் நிலையில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு ஐஐடி மாணவர்கள் சிலருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

அவர்களை சோதனை செய்து பார்த்ததில் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் இருந்த சக மாணவர்களை சோதித்து பார்த்ததில் சிலருக்கு லேசான அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் மருத்துவமனையில் சேர்க்கும் படியான அவசியம் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.தற்போது கொரோனா தொற்றானது அதிகரிக்கும் படியாக இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அந்தவகையில் இனி பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் கட்டாயம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை பொதுசெயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.அனைத்து  மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஅடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் வீடு தேடி வரும்!