மக்களே எச்சரிக்கை! இவ்வாறு நீங்கள் செய்தால் மின் இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படும்!
பெங்களூரில் பெஸ்காம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.இந்த நிறுவனம் பெங்களூர் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகின்றது.பொதுவாக அனைத்து பகுதிகளிலுமே ஒரு மாதம் மின்கட்டணத்தை செலுத்த தவறினால் அபராத தொகை செலுத்த வேண்டும்.
இல்லையெனில் இரண்டு மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்துறை ஊழியர்கள் சமந்தப்பட்ட வீடு இல்லை கட்டிடங்களுக்கு சென்று பீஸ் கேரியரை கழற்றி அந்த இடத்திற்கு தற்காலிகமாக மின் விநியோகத்தை நிறுத்துவார்கள.அந்த கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக சென்று மின் கட்டணத்தை செலுத்திவிட்டால் மீண்டும் பீஸ் கேரியரை பொருத்தி மின் இணைப்பை வழங்கி விடுவார்கள்.
இந்நிலையில் பெஸ்காம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பை பெஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தொடர்ந்து மூன்று மாதங்ககளுக்கு மின் கட்டணத்தை செலுத்த தவறினால் சமந்தப்பட்ட கட்டிடங்கள் அல்லது வீடுகளில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும்.அதுமட்டுமின்றி பெஸ்காமால் வழங்கபட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.
அவ்வாறு ஒரு முறை அனுமதி ரத்து செய்யப்பட்டால் கட்டிங்களின் உரிமையாளர்கள் மீண்டும் மின் இணைப்பிற்கு முறையாக விண்ணப்பித்து புதிதாக தான் மின் இணைப்பை பெற வேண்டும்.பெஸ்காமின் இந்த முடிவால் மின் கட்டணம் பாக்கி வைத்திருப்பவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.