மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

Photo of author

By Rupa

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் இருப்பதன் மூலமும் பல தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதைப்போல சாலைகளில் நாம் எரியும் குப்பைகளை மிதித்துக் கொண்டு அந்தக் கிருமிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறோம்.இதனால் பல்வேறு தொற்றுக்கள் உருவாகி பெரும் ஆபத்தை கொண்டு வந்துவிடுகிறது. இதனை அனைத்தும் தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால் வேலூர் மாநகராட்சி சுற்றியுள்ள அனைத்து கடை பகுதிகளிலும் அந்த கடை உரிமையாளர்கள் கட்டாயம் இரு குப்பை தொட்டிகளை வைத்திருக்க வேண்டும்.

முக்கியமாக சாலையோரங்களில் உள்ள கடைகள் குப்பை தொட்டிகளை கட்டாயம் வைத்திருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.ஏனென்றால் சாலையோரம் உள்ள கடைகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் மக்கள் சாலைகளில் குப்பைகளை போட்டு செல்கின்றனர்.அதைப்போல மக்கும் குப்பை ,மக்காத குப்பை என்று மக்கள் பிரித்து போடும் வகையில் இரு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர்.இதனால் மக்கள் சாலைகளில் குப்பை போடுவதை தவிர்க்க இயலும்.

மேலும் மக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பை போடாமல் தெருக்களில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.அதேபோல கடை உரிமையாளர்கள் அவர்களின் கடைகளுக்கு வெளியே குப்பைத் தொட்டிகளை வைக்காமல் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இது சிறிய அளவிலான செயல்பாடாக இருந்தாலும் நாளடைவில் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆணை அனைத்தையும் வேலூர் நகர நல அலுவலர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.