மக்களே எச்சரிக்கை! சிலிண்டரில் இனி காலாவதி தேதியை கவனியுங்கள் முழு விவரம் இதோ!
தற்போதுள்ள காலகட்டத்தில் சிலிண்டர் காலியாகும் காலம் வந்தவுடனே செல்போன் மூலமாக முன்பதிவு செய்கின்றோம்.அடுத்த இரண்டு நாட்களில் நம்முடைய வீடு தேடி சிலிண்டர் வந்து விடுகின்றது.ஆனால் நாம் அந்த சிலிண்டரில் உள்ள காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம் என்றால் பலரும் இல்லை.
அதனை கண்டறிய முதலில் சிலிண்டரில் மேற்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும்.அதில் ஒரு கம்பியில் சிலிண்டரின் எடை அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.மற்றொரு கம்பியில் காலாவதி தேதி குறித்து விவரங்கள் சுருக்கமாக இருக்கும்.அதில் ஒரு ஆங்கில எழுத்தும் இருக்கும்.
அந்த எழுத்துக்களில் A என்று இருந்தால் ஜனவரி முதல் மார்ச் வரை, B ஏப்ரல் முதல் ஜூன் வரை,C என்று இருந்தால் ஜூலை முதல் செப்டம்பர் வரை,D என்று இருந்தால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என அர்த்தம்.
எடுத்துக்காட்டாக A 23 என்று இருப்பின் மார்ச் 2023 உடன் காலவதியாகும் என கூறப்படுகின்றது. அதுபோல ஒவ்வொரு மாதத்திற்கும் இவ்வாறு கணக்கிடப்படுகின்றது.காலாவதியான மாதத்திற்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக்கூடாது.