கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் நோட்டுகளுக்கு அசலான கள்ளநோட்டுகளின் புழக்கம் 151 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. அதற்குப் பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
அதன்பிறகு ரிசர்வ் வங்கியும் புதிதாக 200 ரூபாய் நோட்டினை அறிமுகப்படுத்தியது. இது கள்ள நோட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
அதன்பிறகு தற்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019 மற்றும் 20 ஆம் நிதி ஆண்டில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளில் 30,054 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது 2018-19 ஆம் ஆண்டை விட 37 சதவிகிதம் அதிகமாகும்.
அதுபோலவே, 200 ரூபாய்க்கான கள்ள நோட்டுகள் 31,969 ஆக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த 200 ரூபாய் கள்ள நோட்டுகள் மட்டும் சென்ற ஆண்டைவிட 151 சதவிகிதம் அதிகமாகும்” என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோட்டுகளில் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறையினால் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.