மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
சமீப காலமாக புது புது ஆப்கள் மக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. மீண்டும் அத்தொகையை பெறும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செல்போனில் உள்ள தகவல்களை எடுத்து அதை வைத்து மிரட்டி வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குவிய தொடங்கியது. இதனை கண்டுபிடிக்க டெல்லியில் இரண்டு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்பொழுது விசாரணை முடிவடைந்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
நமது செல்போன் மூலம் கடன் வழங்கும் ஆப்கள் அனைத்தும் சீனாவிற்கு நேரடி தொடர்பு கொண்டவை என கூறியுள்ளனர். இதற்கென்று ஒரு தனிக்குழு அமைத்து மக்களுக்கு புதுப்புது செயலிகள் மூலம் கடன் வழங்கி அப்பொழுது அவர்கள் செல்போனில் இருக்கும் அனைத்து டேட்டாவையும் திருடி அவர்களை பிளாக்மெயில் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு போலீசார் 22 பேரை தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். இந்த 22 நபர்களும் சீன நிறுவனங்களின் நேரடி தொடர்பாளர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இவர்களிடம் இருந்து 50 செல்போன்கள், 25 கணினிகள், ஒன்பது மடிக்கணினிகள், பத்திற்கு மேற்பட்ட கிரெடிட் அண்ட் டெபிட் கார்டுகள், கார்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இவர்கள் வைத்திருக்கும் ஆப் மூலம் மக்களுக்கு 5000 முதல் 10 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றனர். அந்தத் தொகையை மக்கள் திருப்பி செலுத்திய போதிலும், அவர்கள் செல்போனில் இருந்து திருடப்பட்ட டேட்டாவை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளர்.
அதாவது, நாம் எப்பொழுது இவர்களின் ஆப்பை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்கிறோமோ அப்பொழுதே நமது டேட்டா அனைத்தும் நேரடியாக சீன தொடர்பாளர்களுக்கு சென்று விடும் என போலீசார் விசாரனியில் தெரியாவந்துள்ளது. இதை வைத்துதான் அந்த கும்பல் மக்களை மிரட்டி வந்துள்ளது. இந்த விசாரணையில் முக்கிய புள்ளியாக சீனாவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.