சமையல் எரிவாயு சிலிண்டரை பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.அந்த வகையில் சிலிண்டரின் விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்தது.அதனால் சமையல் சிலிண்டர் எரிவாயு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது.
பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் வாங்கி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.நிதி நெருக்கடியால் அனைத்து பொருட்களின் விளையும் சிகரத்தை தொடும் அளவிற்கு உச்சமடைந்துள்ளது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பிச் செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் ரூ 10000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதனால் 900 ரூபாய்க்கு விற்கும் பிளாஸ்டிக் பேக்குகளில் எரிவாயு நிலையங்களுக்கு சென்று எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் மக்கள் கம்ப்ரசர் மூலமாக வீட்டில் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.அவ்வாறு எரிவாயுவை பயன்படுத்தும் பொழுது எரிவாயு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து மக்கள் காயம் அடைந்து மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.