ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் திமுக அறிக்கையில் கூறியதை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.அதனை நூறு சதவீதம் வெற்றியடைய செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அவர் கூறியது,முதலில் நாம் கூறிய அறிக்கைகள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தங்களது ஒத்துழைப்பை தர வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமின்றி திமுக தேர்தலின் போது அறிவித்த 500 அறிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.நாம் அறிவித்த,மக்களுக்கு நிறைவேற்றப்போவதாக கூறிய அறிக்கைகள் அனைத்தும் அரசாணைகளாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அது மிகவும் அவசியமான ஒன்று எனவும் தெரிவித்தார்.அதேபோல மானியக்கோரிக்கை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அனைத்தும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என கூறினார்.
அதேபோல அவ்வாறு அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது மானியக்கோரிக்கைக்கும் மீதான எந்தவித வழக்குகள் போடாமல் பார்த்துக்கொள்வது அதிகாரிகளின் பொறுப்பு என கூறினார்.விரைவில் இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு அதன் செயல்பாடுகளை தான் கண்காணிக்க உள்ளதாக கூறினார்.நாம் மக்களுக்கு அளித்த அனைத்து அறிவிப்புகளும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இந்த அறிவிப்புகளை செயல்படுத்த அந்தந்த துறை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அரசு தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் தகவல் பலகையில் இடம் பெரும் என தெரிவித்துள்ளார்.இதனால் தற்போது எந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்பதை மக்கள் ஆன்லைனில் கண்டுகொள்ளலாம்.அதுமட்டுமின்றி இந்த பலகையில் தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.