பாஜக – வை செலெக்ட் பண்ணிருக்கலாம்.. கூட்டணிக்கு யாரும் இல்லை!! கதறும் விஜய்!!

TVK : எம்ஜிஆர் விஜயகாந்த் போன்ற மறைந்த தலைவர்களை முன் உதாரணமாக வைத்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரது மாநாட்டிற்கு ஏகாதக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் இவர் கூட்டணி குறித்து போட்ட கணக்கெல்லாம் ஒவ்வொன்றாக தவிடு பொடியாகி வருகிறது. இவர் மாநாட்டில் என்னுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுக கூட்டணி கட்சிகள் ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் நாளடைவில் அதனை அப்படியே விட்டுவிட்டனர்.

விஜய் அடித்த முதல் பாலும் அவுட் ஆனது. திமுக கூட்டணியை பிரிக்க முடியாமல் போனது. இரண்டாவதாக இவரது பாலானது நாம் தமிழர், அதிமுக என இரு பக்கமும் இருந்தது. நாம் தமிழர் சீமானுடன் ஒத்து வராத நிலையில் அவரும் விலகினார். மூன்றாவதாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விஜய் சரிக்கு பாதி தொகுதி வேண்டும், வெற்றி பெற்றால் நாங்கள் தான் முதலில் ஆளுமை செய்வோம் என்று போட்ட கண்டிப்புகளால் எடப்பாடி பின் வாங்கினார்.

இப்படி பெரும்பாரியான கூட்டணி ஏதும் இல்லாமல் விஜய் தன்னந்தனியாக உள்ளார். இவ்வாறு இருக்கையில் விஜய்க்கு நெருக்கமானவர்கள் நீங்கள் செய்தது மிகவும் தவறு என கூற ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் அரசியலுக்கு வந்த உடனே பாஜகவுடன் கூட்டணி எனக் கூறியிருந்தால் இப்படி இருந்திருக்க தேவையில்லை என்று அறிவுறுத்தி வருகின்றனர். தற்சமயம் பாஜக அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், உறுதியாகி உள்ளது என கமலாலய கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் விஜய் மிகவும் அப்சட்டில் உள்ளாராம். கமல்ஹாசன் சரத்குமார் வரிசையில் விஜய் தற்போது இருப்பதாக கூறுகின்றனர்.