மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா
அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையில் கிடைக்காது என்று அம்மாநில பாஜக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அசாம் மாநிலத்தின் பாஜகவின் முதல்அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
2017ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொள்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை மசோதாவை நிறைவேற்றியது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இரண்டு குழந்தைகள் மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற தடை அமலுக்கு வர உள்ளது. தற்போதைய அரசு பணியில் உள்ள ஊழியர்களும் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் ஒதுக்கவும் வீடு கட்டுபவர்களுக்கு அரசு நிலம் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு எவருக்கும் விற்க முடியாத வகையில் மசோதா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அசாம் மாநிலத்தின் குடும்பத்தின் சராசரி எண்ணிக்கை 5.5 சதவீதமாக உள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை சொல்கிறது தேசிய சராசரியை விட இது அதிகம் என்பதால் அசாம் மாநிலம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தலாம் என்று தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அசாம் மாநிலத்தை பாஜக முதலில் தேர்வு செய்துள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.