மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்!
வங்கக்கடலில் உருவான புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வகைக்கப்பட்டது.சற்று முன்பு இந்த புயல் தீவிரமடைந்தது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் கடலூரில் காற்றின் வேகம் அதிகம் இருக்கின்றது அதனால் கடலோர பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் அதனால் கடலூர் துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தினால் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட சிறப்பு பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது.
தலைமை செயலர் இறையன்பு கூறுகையில் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் பொது மக்கள் தேவையற்ற பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மேலும் தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்னதாகவே வாங்கி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மரங்களின் கீழ் நிற்பது ,நீர் நிலைகள் மற்றும் திறந்த வெளியில் புகைப்படம் எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.மேலும் உணவுகள் ,குடிநீர் ,மருந்துகள்,அவசர உதவி பெட்டி போன்றவைகள் தயாரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.