நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுப்பதில்லை!!இயக்குனர் பாரி இளவழகன் ஆவேசம்!!

Photo of author

By Gayathri

இயக்குனர் பாரி இளவழகன் எழுதி இயக்கிய படம் ஜமா. இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிக்க, நடிகர்கள் எல்லாரையும் புதிதாக அறிமுகம் செய்தார். இப்படத்தில் இவரும் நடித்துள்ளார். “தெருக்கூத்து”இடுபவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாக சித்தரித்திருப்பார்.

ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கூத்தாடும் போது அவருக்கு ஏற்படும் அவமானத்தை பற்றி நுணுக்கமாக நடித்திருப்பார். “இசைஞானி இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இயற்றியுள்ளார்”. இளையராஜா சார் ‘மூத்த நடிகர் சேத்தனிடம், நீங்கள் மிகவும் அழகாக நடிக்கிறீர்கள். நீங்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல், நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து உங்கள் திறமையை பரப்ப வேண்டும்’ எனவும் கூறியுள்ளார் என பாரி அவர்கள் இப்பட நேர்காணலில் சொன்னார்.

இருப்பினும், இப்படம் தியேட்டரில் அமோக வரவேற்பு பெறவில்லை.இந்நிலையில் வலைதளத்தில் இவர், எனது மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் நான் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை பார்ப்பேன். ஆனால் அந்தப் படத்தைக் கூட தியேட்டரில் மக்கள் வரவேற்பு தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.