முன்பை விட இப்பொழுது அதிகமான மின்வெட்டு கள் ஏற்படுகின்றன என மக்கள் தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த தினசரி மின்தடை இருக்கின்றன. இன்னிலையில் திருபுவனத்தில் உள்ள சில கிராமங்களுக்கு ஒரு நாளுக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவை மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் நகர் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு மின் விநியோகம் தினசரி நடைபெறுகிறது. கடந்த ஒரு சில நாட்களாகவே பத்திற்கும் மேற்பட்ட முறை ஒரே நாளில் மின்வெட்டுகள் நடைபெறுகின்றன.
மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்தாலும் சரியான பதில்களைச் சொல்ல மறுக்கின்றனர் என மக்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் மின்சாதனங்கள் பழுதாகி விடுகின்றன என மக்கள் சோகத்தில் உள்ளனர். இப்படி தொடர் ஊரடங்கு காலகட்டத்தில் மின்சாரமும் அதிக நேரம் தடைபடுவதால் மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் இந்த மாதிரியான மின்வெட்டுகள் நடைபெறும் என மக்கள் கூறுகின்றனர். இதை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவனித்து சரி செய்வாரா?
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய பொழுது 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றுதான் கூறுகிறார்கள் ஆனால் மின்வெட்டு அதிகமாகிக் கொண்டுதான் வருகின்றது என மக்கள் குறை கூறி வருகின்றனர்.
மின்சார வாரிய அலுவலர்கள் கூறுகையில், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும் தினசரி பராமரிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மற்றும் மழை காலங்களில் மின்கம்பிகள் உரசி மின்சாரம் தடை படுகின்றன. அதை நீக்குவதற்கு போதிய அளவில் மின் ஊழியர்கள் இல்லை என வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.