ரேஷன் கடையில் குவியும் மக்கள்!!இனி கேஸ் சிலிண்டர் ரூ.450 மட்டுமே!!

Photo of author

By Jeevitha

Free Gas Cylinder: நம் அரசு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முறையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.450க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் குடிமை பொருள் வழங்கும் நுகர்வோர் துறை அமைச்சர் சுமித் கோதாரா ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த முறையை பயன்படுத்த நியாய விலைக்கடையில் உள்ள பிஓஎஸ் இயந்திரம் மூலம் பதிவிடும் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான குடும்பங்களுக்கு எல்பிஜி ஐடிகளை ஆதார் ரேஷன் கார்டுகளுடன்  வழங்குவது நவம்பர் 5 முதல் 30 வரை செயல்படுத்தப்படும். மேலும் இந்த முறை தேசிய உணவு பாதுகாப்பு குடும்பங்கள் அல்லது அவர்களது உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, குறிப்பிட்ட காலகட்டத்தில் நியாய விலைக் கடை மட்டத்தில் இருந்து பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் ஆதார் எண் இணைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆதார் அட்டை இணைக்கப்படாத அனைத்து பயனாளிகளும் கண்டிப்பாக இணைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி பிஓஎஸ் இயந்திரத்திலிருந்து நியாயவிலை கடைக்காரரால் விடுபட்ட பயனாளிகளின் இ-கேஒய்சியும் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது