கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

Photo of author

By Parthipan K

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

Parthipan K

People in great pain! Water supply stoppage today!

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது.அதன்காரணமாக அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் ஆகிய முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தப்படுகிறது. மேலும் அந்த பராமரிப்பு பணிகளை நீர்வளத் துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்.

அதன் காரணமாக தான் பகுதி 7,8,9,10,11,12 பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகமானது நிறுத்தம் செய்யப்படுகின்றது. அதனை தொடர்ந்து அம்பத்தூர்,அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு போன்ற பகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.