அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள்
சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது.இதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிர் பாரத வகையில் இவ்வாரம் மூன்று அதிர்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.இந்த தகவல்களால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
முதல் ட்விஸ்ட்:
முதல் ட்விஸ்ட் ஆகா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் வேலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இவர் விடுதலையாகி வெளியே வந்ததும் செய்தியாளர்களை சந்தித்து கூறியது,நான் விரைவில் மக்களை பொதுக்கூட்டம் பிரச்சாரத்தில் சந்திப்பேன் என்றார்.
இதனையடுத்து கடந்த புதன் கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த போது நான் கட்சியை விட்டு விலகுகிறேன்.அம்மாவின் ஆட்சி வருவதற்கு கடவுளிடம் பிராத்திப்பேன் என்றார்.அதுமட்டுமல்லாமல்,திமுக ஆட்சிக்கு வராமல் தொண்டர்கள் அனைவரும் உண்மையுடன் போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இவரது இந்த முடிவு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.இவரது இந்த முடிவானது அதிமுகவிற்கு சாதகமா அமைந்தது போல இருந்தது.சசிகலாவின் அறிவிப்பால் அதிமுக மற்றும் இதர கட்சிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
இரண்டாவது ட்விஸ்ட்:
கமல்ஹாசன் முதலில் தனித்து நிற்பதாக கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைக்க திட்டங்களை வகுத்து வருகிறார்.சரத்குமார் மூன்று நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறியதில்,கமல் தன்னுடன் கை குலுக்கி சென்றிருக்கிறார்.என்னுடன் கூட்டனி அமைத்து கொள்வதற்கான செயல் முறையாக இது கருதப்படுகிறது என்றார்.மேலும் கமல் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவர் அறிவித்தார்.
இதைப்பற்றி கமலிடம் கேட்ட போது கை குலுக்கி செல்வதெல்லாம் கூட்டணி அமைத்து கொள்வதாக அர்த்தம் இல்லை என்று கூறினார்.அடுத்த ஓரிரு நாட்களிலே சமத்துவ கட்சி தலைவரான சரத்குமார் மற்றும் அவருடன் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரை கமல்ஹாசன் கூட்டணி தொடர்பாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சரத்குமார் தொகுதி பங்கீடு குறித்து நல்ல செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.
மூன்றாவது டிவிஸ்ட்:
மூன்றாவது டிவிஸ்டாக திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவு தொகுதிகளையே பங்கீட்டு தந்துள்ளது.இந்நிலையில் திமுக தனது கூட்டணி அணிகளான விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை பங்கீட்டு தந்துள்ளது.காங்கிரசுக்கு 25 இடங்களையும் வழங்கியுள்ளது.
இதே போல் அதிமுகவும் பாமகவிற்கு 23 மற்றும் பாஜகவிற்கு 20 தொகுதிகளை வழங்கியுள்ளது.இதனைத்தொடர்ந்து தேமுதிக கட்சியுடனும் கூட்டணி தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது.ஒட்டு மொத்தத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் நேருக்கு நேராக 120 இடங்களில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.இது தமிழக தேர்தல் களத்தில் சரியான போட்டியாக நிகழும்.
முதல் டிவிஸ்டாக சசிகலா அறிவித்த அறிவிப்பால் மக்களின் சில வாக்குகள் தடுமாறும் நிலை ஏற்படும்.அதனையடுத்து கமல்ஹாசனின் கூட்டணியானது திமுகவை சிறிதளவு அச்சுறுத்தும் விதமாக உள்ளது.மூன்றாவதாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீட்டால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இத்தகைய காரணங்களால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று யார் முதல்வராக வருவார் என்பதை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.