சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
வரும் மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வரும் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் என்று மக்கள் கூட்டம் அலைமோதும்.தற்போது தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.மீண்டும் மக்கள் கூட்டம் கூடினால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.அதனால் அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் நாளடைவில் பல விதிமுறைகளை அமல்படுத்தும். இருப்பினும் இந்த பண்டிகை சமையங்களில் பல இடங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு செல்வர்.
அதனை பலர் தன்வசப்படுத்திக் கொள்வர். கூட்ட நெரிசலில் மக்களுடன் மக்களாக கலந்து அவர்களிடம் உள்ள நகை பணத்தை திருடி செல்வர். மக்களும் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று அறியாமல் வீட்டிற்கு சென்ற பிறகு தங்கள் பொருட்களை பறிகொடுத்ததை எண்ணி வருத்தம் அடைவர். இதனை தடுக்கும் விதமாக தற்பொழுது சேலத்தில் ஒரு புதிய முயற்சியை எடுக்க உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க உள்ளனர். அதாவது முக்கிய இடங்களில் உயரமான இடத்தில், கோபுரம் அமைத்து அங்கு போலீசார் மேலிருந்து மக்கள் செல்லும் பாதையில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க உள்ளதா என காண உள்ளனர்.
கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதன் மூலம் திருட்டுக்களை தடுக்க முடியும்.சேலம் பழைய பஸ் நிலையத்தில் ராஜகணபதி கோவில்,கன்னிகா பரமேஸ்வரி கோவில்,அண்ணா சிலை மற்றும் கடைவீதி ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதேபோல புதிய பஸ் பேருந்து நிலையத்திலும் டிவிஎஸ், ஐந்து ரோடு ,ஏவி ஆர் மற்றும் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் வைப்பதாக கூறி உள்ளனர்.இதுமட்டுமின்றி அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் ஆய்வு செய்வர். இது அனைத்தும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்று கூறியுள்ளனர்.