இந்த வயதுடையோர் நாட்டை விட்டு வெளியேற தடை! ரஷ்யா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

ரஷ்யாவில் இருந்து 18 வயது முதல் 65 வயது வரையில் உள்ளவர்கள் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் நாட்டை விட்டு வெளியேற பயணச்சீட்டு வழங்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது தற்போது ஓர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே ரஷ்யப்படைகளுக்கு எதிராக உக்கிரன ராணுவம் கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஆகவே ஓரை தீவிரப்படுத்தும் விதத்தில் உக்கரையினின் கிழக்கு மற்றும் தெற்கே இருக்கின்ற 4 பிராந்தியங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லூகன்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்யா உள்ளிட்ட 4 பிராந்தியங்களை தங்களுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தொலைக்காட்சியின் மூலமாக ரஷ்ய மக்களிடையே ரஷ்ய அதிபர் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் ரஷ்ய இராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் இருப்பில் வைக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஆர்மேனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அடுத்த சில தினங்களுக்கு முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லோரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடும் சட்டத்தை ரஷ்ய அரசு அமல்படுத்த கூடும் என்பதால், மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராணுவத்தில் பணிபுரிய தகுதியுடைய 18 வயது முதல் 65 வயது வரையிலான ரஷ்ய நாட்டைச் சார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணி சீட்டு வழங்கக் கூடாது என்று ரஷ்ய அரசு உத்தரவிட்டிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணுவத்தின் முறையான அனுமதி இருப்பவர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.